×

கள்ள மார்க்கெட்டில் விற்க டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அமோகம்: கார், மினி வேன்களில் அள்ளிச் சென்றனர்

சென்னை: தமிழகத்தில் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தபோதெல்லாம் அரசு கண்டுகொண்டதில்லை. ‘டார்கெட்’ வைத்து  ‘டாஸ்மாக்’ மூலம் வருவாய் ஈட்டுவதிலேயே குறியாக இருந்தது. ஆனால், இந்தக் கொரோனா பரவல், ஒரே நாளில், ஒட்டுமொத்த டாஸ்மாக் கடைகளையும் மூட வைத்தது. மது விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்தியது. ‘நீயின்றி நானில்லை’ என, மதுபோதைக்கு உடலைப் பழக்கிக்கொண்ட குடிமகன்களுக்கோ, மனதளவிலும் உடலளவிலும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களின் இந்த பலவீனம், கள்ளச் சந்தையில் டாஸ்மாக் சரக்குகள் விற்பனை செய்வது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற சட்ட விரோத காரியங்கள் நடப்பதற்கும் வழி வகுத்தது. இதையடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையினர், அவசர அவசரமாக கிராமப்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் இருப்புகளைக் கணக்கிட்டு, அதனை மாவட்ட அலுவலகத்துக்கு கொண்டுபோய்ச் சேர்த்தனர்.

ஆனாலும், 144 தடை உத்தரவு அறிவித்ததுமே, ஆளும்கட்சியினரின் ஆசியோடு பார் நடத்துபவர்கள், பெட்டி பெட்டியாக  அரசு விலைக்கே பாட்டில்களை வாங்கி பதுக்கிவிட்டனர். தொடர்ந்து ஒரு குவார்ட்டர் ₹500 வரை விற்று பணம் பார்த்தனர். போலீஸ் நிலையங்களில் பறிமுதல் செய்து வைத்திருந்த மதுபானங்களை கூட சில போலீசாரின் ஆசியோடு கள்ள சந்தையில் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வரும் 19 முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், காக்களூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில், கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு விற்க சிலர் கார், மினிவேன்கள் மற்றும் பைக்குகளில் வந்து பெட்டி பெட்டியாக மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.



Tags : Task stores , Tasks , sale , counterfeit market
× RELATED டாஸ்மாக் கடைகளில் 21 வயது...